அசாமில் பாஜக முதல்வராகிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா

BJP Congress Assam
By mohanelango May 09, 2021 10:23 AM GMT
Report

அசாமில் வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மொத்தம் 126 இடங்கள் அடங்கிய அசாம் சட்டமன்றத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் ஆளும் கட்சியான பா.ஜ.க 60 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 15 இடங்களிலும் வென்றன.

கடந்த, 2016ல், சர்பானந்தா சோனவாலை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை பா.ஜ.க சந்தித்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு வாரமாகி உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அசாம் அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார்.

முதல்வர் யாரென்று முடிவாகாத நிலையில் பாஜக தேசிய தலைவர்களோடு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஹிமாந்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் பதவியில் இருந்து சர்பானந்தா சோனவல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.

இந்நிலையில் கவுகாத்தியில் பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், சட்டசபை குழு தலைவராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.