இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு - சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் புதிய பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு
இந்த பயணிகளின் வருகை, முன்பை விட அதிகமாக உள்ளது. இந்திய நாட்டில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் குளிக்காலங்களில், மலைவாழ் குடிமக்களுக்கு அன்றாட பணிகளைச் செய்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், இங்கு நிலவும் குளிரில் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த, ஹிமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (HPTDC) வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 40 சதவீத தள்ளுபடியை வழங்க முடிவு செய்துள்ளது.
லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, மண்டி, குலு, கின்னவுர், சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பனிப்பொழிவு பொழிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
