இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - நகரமே பனியால் மூடப்பட்ட வீடியோ வைரல்...!
இமாச்சலப்பிரதேசத்தில் பனிப்பொழிவு
கடந்த சில நாட்களாக இமாச்சலப்பிரதேசத்தில் கடுமையாக பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. ஒரு பக்கம் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தாலும், இந்த பனிப்பொழிவால் மலைவாழ் குடிமக்களுக்கு அன்றாட பணிகளைச் செய்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், இங்கு நிலவும் குளிரில் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த, ஹிமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (HPTDC) வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 40 சதவீத தள்ளுபடியை வழங்க முடிவு செய்துள்ளது.

பனியால் மூடப்பட்ட குலு
லாஹவுல்-ஸ்பிடி, ஸ்ரீநகர், சம்பா, காங்க்ரா, மண்டி, குலு, கின்னவுர், சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பனிப்பொழிவு பொழிந்து வருகிறது.
தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
இமாச்சல பிரதேசம், குலுவில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பனிப்பொழிவு காரணமாக பனியால் மூடப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ -
#WATCH | Fresh snowfall received in Srinagar, J&K pic.twitter.com/7iQFPSayGj
— ANI (@ANI) January 25, 2023
#WATCH | Himachal Pradesh: Rohtang Pass in Kullu covered in a blanket of snow pic.twitter.com/ipP8BzOoVC
— ANI (@ANI) January 25, 2023