இமாச்சலப் பிரதேசத்திற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி - தமிழக முதல்வருக்கு இமாச்சல் முதல்வர் நன்றி!
நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இமாச்சல் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் நடந்தது. இதனால் இமாச்சல் கடும் பாதிப்பிற்கு உள்ளானது.
இதற்காக கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இமாச்சலப் பிரதேச நிவாரண பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி, இமாச்சல் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். மு.க. ஸ்டாலினுக்கு நன்றி இந்நிலையில் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் "இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு சவாலான நேரத்தில் தமிழக அரசு வழங்கிய ரூ.10 கோடி நிதி பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க பயன்படுத்தப்படும். இந்த உதவியானது பேரழிவிற்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்பவும், மீளவும் உதவும். ண்டும் ஒருமுறை, இந்த சவாலான நேரத்தில் தளராத ஆதரவிற்காக உங்களுக்கும், உங்கள் மாநில மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் தாராள மனப்பான்மையும், கருணையும் எங்களுக்கு இந்த கஷ்டத்தை சமாளிக்கும் நம்பிக்கையையும், வலிமையையும் அளித்துள்ளது' என்று சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.