சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்
தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்துள்ளது.
அதிகரித்த கட்டணம்
தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர், கரூர் உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்துள்ளது. 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர், விருதுநகர், மதுரை ,நாமக்கல் ,சேலம் ,திண்டுக்கல் ,தர்மபுரி ,குமாரபாளையம் ,விக்ரவாண்டி ஆகிய இடங்களிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணமாக கார்,வேன், ஜீப் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள ஒரு முறை ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
10 முதல் 50 ரூபாய் வரை உயர்வு
பலமுறை என்றால் 150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மாதாந்திர தொகையாக ரூ.3045 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்,வேன் ,ஜீப் ஆகியவற்றிற்கு கூடுதல் கட்டணமாக 10 முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் சுங்க கட்டணம் திடீரென உயர்ந்ததன் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.