‘’ ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக்காதீங்க ‘’ - மாணவிகள் மேல்முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

supremecourt karnatakahighcourt hijabissue
By Irumporai Feb 11, 2022 06:20 AM GMT
Report

 ஹிஜாப் வழக்கில்  இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது, கர்நாடகாவில் இந்த சம்பவம் மிகப்பெரிய மத ரீதியான மோதலாகவும் வெடித்து உள்ளது.

‘’ ஹிஜாப் விவகாரத்தை  தேசிய பிரச்சனையாக்காதீங்க ‘’  - மாணவிகள் மேல்முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | Hijab Supreme Court Against Karnataka High Court

இந்துத்துவா மாணவர்கள் பலர் அங்கு காவி துண்டு அணிந்து இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக கோழங்களை எழுப்பினர், இந்த நிலையில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு இஸ்லாமிய மாணவிகள் பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

முதலில் ஒரு நீதிபதி அமர்வும், அதன்பின் 3 நீதிபதி அமர்வும் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் ,இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மாணவிகளின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதில் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு தங்களின் உரிமைகளை பறிப்பதாகவும், எனவே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வரும் திங்கள் கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் மாணவிகள் தரப்பு கோரிக்கை விடுத்தது. 

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மாணவிகளின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

மேலும் இந்த விவாகரத்தை இதை தேசிய பிரச்சனையாக்க வேண்டாம். இதில் அரசியலமைப்பு சட்டப்படி நீதிமன்றம் நடக்கும்,  தேவையான நேரத்தில் நாங்கள் இதில் தலையிடுவோம் என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.