ஹிஜாப் விவகாரம் கல்வி நிறுவனங்கள் மூடல் 144 தடை உத்தரவு

hijabissue 144karnataka
By Irumporai Feb 13, 2022 08:05 AM GMT
Report

ஹிஜாப் அணியும் விவகாரத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்’அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் தற்போது மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த காரணத்தால்  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் முன்பு கூடவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிக்கும் பொருட்டு, உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த தடை உத்தரவு பிப்ரவரி 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி இஸ்லாமிய மாணவிகள் தரப்பு தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதினமன்த்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிதக்கது.