ஹிஜாப் விவகாரம் : மாணவி முஸ்கானை ஆதரிக்கிறேன்..கல்வி நிலையங்களில் மதம் கூடாது - பிரேமலதா விஜயகாந்த்

Issue DMDK HijabRow PremalathaVijayakanth
By Thahir Feb 11, 2022 09:52 AM GMT
Report

ஹிஜாப் பிரச்சனையில் தனியாகப் போராடும் பெண்ணுக்கு முழு ஆதரவு கொடுக்கிறோம். அதே சமயத்தில், கல்விக்கூடங்களில் மதம் கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஹிஜாப் விவகாரம் : மாணவி முஸ்கானை ஆதரிக்கிறேன்..கல்வி நிலையங்களில் மதம் கூடாது - பிரேமலதா விஜயகாந்த் | Hijab Row Issue Dmdk Premalatha Vijayakanth

அப்போது பேசிய அவர் நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவும்,அதிமுகவும்மாறி, மாறி அரசியல் செய்து வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர்,

பெட்ரோல் குண்டு வீச்சு என்பது தவறான கலாச்சாரம், அது பாஜகவிற்கு மட்டுமல்ல எந்த கட்சிக்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

தேர்தலின் போது திமுக கொடுத்த நீட் தேர்வு, மாதம் 1000 ரூபாய் போன்ற எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களிடம் உள்ளதாக கூறிய பிரேமலதா,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி பலம், பணபலம்,அதிகார பலத்தை எதிர்த்து தனித்து களம் காண்கிறோம், மக்கள் தேமுதிகவிற்கு நிச்சயம் ஆதரிவளிப்பார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்களை எதிர்த்து நின்று குரல் கொடுத்த மாணவி முஸ்கானை ஆதரிப்பதாக தெரிவித்தார். அதே சமயத்தில் கல்வி நிலையங்களில் மதம் கூடாது எனவும் கூறினார்.