ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை தொடரும் - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

judgement HijabCase HijabRowcase Hijabban KarnatakaHighCourt
By Thahir Mar 15, 2022 05:30 AM GMT
Report

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் பியு கல்லுாரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு சில இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி,கிருஷ்ணா தீட்சித்,ஜெ.எம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின் போது நீதிபதிகள் விசாரணை முடியும் வரை மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல எனவே கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்றும் தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

You May Like This