ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவிகளுக்கு செல்போனில் மிரட்டல் - போலீசிடம் புகார்

Student Intimidation HijabRow HijabIssue HijabCase
By Thahir Feb 11, 2022 09:30 AM GMT
Report

ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்திய 6 மாணவிகளின் செல்போன் எண்களை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதாக பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்தனர்.

இதனிடையே காவி துண்டு அணிந்து வந்த மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது காட்டு தீ போல் பரவி மாநிலம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. கர்நாடகாவில் பெரும்பாலான கல்வி நிலையங்களில் மாணவர்களின் போராட்டம் வழுப்பெற தொடங்கியது .

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.எஸ் கல்லுாரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு எதிராக காவி துண்டு அணிந்து கோஷங்களை எழுப்பிய மாணவர்களை எதிர் நின்று மாணவி முஸ்கான் அல்லாஹு அக்பர் என கூறி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் உடுப்பியில் கல்லுாரி மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்தினர். அந்த மாணவிகளின் தொடர்பு எண்களை சிலர் சமூக வளைத்தலங்களில் பகிர்ந்து வருவதாக கூறி மாணவிகளின் பெற்றோர் உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுவர்தனிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் தங்கள் மாணவிகளின் தொலைபேசி எண்களை பகிர்வதால் அச்சுறுத்தல் வருவதாக தெரிவித்துள்ளனர்.