ஹிஜாப் வழக்கு நாளை பிற்பகல் ஒத்திவைப்பு
ஹிஜாப் வழக்கை நாளை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஹிஜாப் வழக்கை நாளை மதியத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை கர்நாடகா முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுத்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.