ஹிஜாப் விவகாரம் : கூடுதல் நீதிபதிகள் அமர்வில் கார சார விசாரணை

Karnataka HighCourt Hearing HijabRow HijabIssue HijabCase
By Thahir Feb 10, 2022 11:11 AM GMT
Report

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை காரசாரமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்பர் அரசு பி.யூ கல்லுாரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஹிஜாப் விவகாரம் : கூடுதல் நீதிபதிகள் அமர்வில் கார சார விசாரணை | Hijab Row Issue Case Hearing Karnataka High Court

இதையடுத்து மாணவிகள் கல்லுாரி வாயில்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து ஜெய்ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினா்.

இச்சம்பவம் தீயாட்டம் பரவியது.இந்நிலையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் மாணவர்கள் காவிதுண்டு அணிந்து மாணவிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியது.இது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இது பற்றி பேசத்தொடங்கினர்.

இதனிடையே மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதியளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,வழக்கை விசாரித்த நீதிபதி கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.