கர்நாடகவில் அடுத்த 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு எதிராக காவித்துண்டு அணிந்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் வலுத்துள்ளது.
கர்நாடாகாவில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில்,
"மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.