ஹிஜாப்புக்கு எதிர்ப்பு - ஆடைகளை கழற்றி எறிந்து அரை நிர்வாணமாக நின்ற பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ
ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகை எல்னாஸ் நோரூசி ஆடைகளை கழற்றி எறிந்து அரை நிர்வாண கோலத்தில் வீடியோ வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாஷா அமினி மரணம்
ஈரான், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசாரால் கடுமையாக தாக்கினார்கள். இத்தாக்குதலில் அப்பெண் பலத்த படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 17ம் தேதி மாஷா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது.
இப்போராட்டத்தில் இறங்கிய முஸ்லீம் பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தனர். ஹிஜாப்பை தீ வைத்து எரித்தனர். தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அரை நிர்வாண கோலத்தில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
இந்நிலையில், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசியும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வெளியிட்ட வீடியோ ஒன்று உலகமெங்கும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், ஹிஜாப் அணிந்திருக்கும் நடிகை எல்னாஸ் நோரூசி, பின்னர் அதனை கழற்றுகிறார். அதன்பின்னர் தான் அணிந்திருக்கும் ஆடையை கழற்றுகிறார்.
இறுதியில் உள்ளாடையையும் கழற்றி வீசி என் உடல் எனது விருப்பம் என்று ஹிஜாப்புக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் உலகமெங்கும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.