ஹிஜாப் விவகாரம் : அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா பதிலடி

Hijabissue HijabCase USOpinion IndiaRetaliates
By Thahir Feb 12, 2022 07:40 AM GMT
Report

கல்வி நிலையங்களில் ஹஜாப் அணியத் தடை விதிக்கபட்டிருப்பது மத சுதந்திரத்தை மீறும் செயல் என அமெரிக்கா விமர்சித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு மற்ற மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மாணவிகளின் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் எனக் கூறி இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது.

மேலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. ஹிஜாப் பிரச்சனைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர துாதர் ரஷாத் ஹுசைன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத சுதந்திரம் என்பது ஒருவரின் உடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை உள்ளடக்கியதாகும்.

மதம் சார்ந்த ஆடைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து கர்நாடக அரசு தீர்மானிக்க கூடாது.பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது மத சுதந்திரத்தை மீறுவதாகவும்,பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துவதாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.