உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்த ஹிஜாப் விவகாரம் - கொந்தளித்த பொதுமக்கள்

madurai hijabissue TnLocalBodyElection
By Petchi Avudaiappan Feb 19, 2022 05:44 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றச் சொன்ன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, அரசியல் கட்சியினர் வாக்குவாதம் என வாக்குப்பதிவு தாமதப்பட்டு வரும் நிலையில் மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு அல்-அமீன் பள்ளி வாக்குச்சாவடியில்  வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி பாஜக தேர்தல் முகவர் கிரிராஜன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.