ஹிஜாப் வழக்கு : விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

karnataka hijabcontroversy karnatakahighcourt mondayhearing
By Swetha Subash Feb 10, 2022 11:34 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஹிஜாப் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை காரசாரமாக நடைபெற்று வந்தது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்பர் அரசு பி.யூ கல்லுாரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவிகள் கல்லுாரி வாயில்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து ஜெய்ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினா்.

இச்சம்பவம் தீயாட்டம் பரவியது.இந்நிலையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் மாணவர்கள் காவிதுண்டு அணிந்து மாணவிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியது. இது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இது பற்றி பேசத்தொடங்கினர்.

இதனிடையே மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதியளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,வழக்கை விசாரித்த நீதிபதி கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையில் விசாரணை நடைபெற்றது.

மாணவிகளின் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

மனுதாரர்கள் தரப்பு இடைக்கால உத்தரவு கேட்ட நிலையில் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள்