"ஹிஜாபை தடை செய்வது குர்ஆனை தடை செய்வது போன்றதாகும்" - ஹிஜாப் வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் குல்கர்னி

hijabrow banninghijabmeansbanningquran courtadjourned
By Swetha Subash Feb 17, 2022 11:37 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஹிஜாப் வழக்கை நாளை மதியத்திற்கு ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்றம்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து கோஷங்களை எழுப்பினர்.

"ஹிஜாபை தடை செய்வது குர்ஆனை தடை செய்வது போன்றதாகும்" - ஹிஜாப் வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் குல்கர்னி | Hijab Controversy Court Adjourned Again

இந்நிலையில் இந்த பிரச்சனை கர்நாடகா முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட வழக்கறிஞர் வினோத் குல்கர்னி, “நான் ஒரு பக்தியுள்ள பிராமணன். என்னுடைய சமர்ப்பணம் குர்ஆனை தடை செய்வதாக இருக்கலாம்.

ஆனால் எனது சமர்ப்பிப்பு என்னவென்றால், தயவு செய்து வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜானைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதை அனுமதிக்குமாறு இன்றே உத்தரவிடுங்கள்.

ஹிஜாபை தடை செய்வது குர்ஆனை தடை செய்வது போன்றதாகும்” என பேசினார்.

வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மீண்டும் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.