ஹிஜாப் வழக்கு - தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஹிஜாப் வழக்கு
கர்நாடகா மாநிலம் கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள் இஸ்லாமிய மாணவிகள் புர்கா அணிந்து வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் புர்கா அணிவது இஸ்லாமிய சமூதாயத்தில் கட்டாயம் இல்லை என்றும் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்பட்டது. மனுக்களை மீதான விசாரணையை நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பாக ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
அந்த விசாரணையில் கர்நாடக அரசு மற்றும் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வழக்கறிஞர்கள் பல பரபரப்பு வாதங்களை முன் வைத்தனர்.
வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.