ஹிஜாப் தடைக்கு வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் தடை
கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும் என்று வாதிட்டார்.
அதேபோல், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றது.
இன்று தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதால கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் அளிக்கப்பட இருக்கும் தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.