ஹிஜாப் விவகாரம் - 'அல்லாஹ் அக்பர்' என முழக்கமிட்ட முஸ்லீம் மாணவிக்கு அல்கொய்தா ஆதரவு - வீடியோ வெளியானதால் பரபரப்பு

hijab-affair ஹிஜாப் வீடியோ muslim-student விவகாரம் முழக்கமிட்ட முஸ்லீம்மாணவி முஸ்கான் அல்கொய்தா
By Nandhini Apr 07, 2022 06:31 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பர்தா அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய முற்பட்டப்போது அந்த மாணவியை முற்றுகையிட்டு சக மாணவர்கள் பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாக போராடிய மாணவி பதிலுக்கு ‘அல்லாஹு அக்பர்’ என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்.

அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரல் ஆனது.

இந்நிலையில், கர்நாடகா ஹிஜாப் போராட்டத்தில் துணிச்சலாக கோஷமிட்ட முஸ்லீம் மாணவி முஸ்கானுக்கு அல்கொய்தா தலைவன் அய்மான் அல் ஜாவ்வரி பாராட்டு தெரிவித்து, 9 நிமிடங்கள் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, முஸ்கானின் தந்தை கூறுகையில், எங்களுக்கும், அல்கொய்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மகளின் படம் தீவிரவாதிகளின் சுவரொட்டியில் இடம் பெறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இப்பிரச்சினையை தூண்டி மோதல்களை அதிகப்படுத்த அல்கொய்தா முயற்சிக்க வேண்டாம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறினார்.   

ஹிஜாப் விவகாரம் -