இந்தோனேஷியாவில் 350 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் ரயில் சோதனை ஓட்டம் - வியந்து போன சீன அதிபர்...!

Viral Video China Indonesia
By Nandhini Nov 17, 2022 11:51 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இந்தோனேஷியாவில் அதிவேக ரயில் சோதனையோட்டத்தைப் பார்த்து சீன அதிபர் வியந்து போனார். 

350 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் சோதனை ஓட்டம் 

இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.

சீன அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தோனேஷியாவின் ஜகர்தா - பான்டங்க் இடையே ரயில் நிலையத்தின் கட்டமைப்புகள் 90 சதவீதம் முடிந்துள்ளது.

இந்நிலையில், இந்தோனேஷியா-சீனா அதிவேக இரயில்வேயின் (KCIC) டைனமிக் சோதனை நேற்று நடைபெற்றது. இந்த இந்தோனேஷியாவின் ஐகார்டா - பாண்டங்க் இடையே மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலுக்கான சோதனையோட்டம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் முன்னிலையில் நடைபெற்றது.

இத்திட்டம் சீன அரசின் நிதியுதவியிலிருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை சீன அதிபர் வியந்து பாராட்டியுள்ளார்.   

தற்போது இது குறித்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

highspeed-train-bullet-train-chinese-indonesia