உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - அரசாணை வெளியீடு
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்
இந்தியா முழுவதும் இருக்க கூடிய அகில இந்திய தொழில்நுட்ப கழங்கள் IIT, IIM, IISC, AIIMS ஆகியவற்றில் சேர்வதற்கான படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் சான்றிதழ்களை ஆய்வு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் பரிந்துரை செய்ய வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து தேவையான நிதி குறித்த பட்டியலை அரசுக்கு அனுப்பும்.
அரசு பட்டியலை சரிபார்த்து 4 ஆண்டுகளுக்கு ஆகும் செலவு அனைத்தையும் மொத்தமாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திற்கு விடுவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் வங்கி கணக்கில் கட்டணத்தை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் பிரித்து வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது 2022 - 2023 கல்வி ஆண்டுக்கான அறிவிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.