கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு..!
highcourt
order
covidcheckup
tngovernment
By Anupriyamkumaresan
கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால் கொரோனா பரவலை விரைந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமமான அளவில் மருந்து, தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.