வேளாண் சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.!
highcourt delhi farmer
By Jon
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுக்கும் விவசாயிகளின் சங்கங்களுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அந்த வழக்கின் விசாரணையின் போது பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
வேளாண் சட்டங்களை ஆராய குழு அமைக்கப்போவதாக அறிவித்திருந்த உச்சநீதிமன்றம், அந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.