அழகிகளை வைத்து ஹைடெக் விபச்சாரம்..மணிக்கு 20 ஆயிரம் முதல் 30 லட்சம் வரை - புரோக்கர் அதிரடி கைது..!
கல்லுாரி மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் உட்பட அனைவரையும் வைத்து விபாச்சாரம் பிசினஸ் செய்து கோடிகளை சம்பாதித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொழிலை நடத்த இந்தியா முழுவதும் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கிய இளைஞர் பிடிபட்டது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில் பல கோடிகளை சம்பாதித்து வந்தவர் புரோக்கர் ஜோதி ரஞ்சன் ஜெனா (எ) ராகுல்.
இவர் மீது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையம் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஒடிசாவில் இருந்து கொண்டே சமூக வலைத்தளம் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த இந்த ஹைடெக் புரோக்கரை பிடிக்க முடியாமல் சென்னை போலீசார் 10 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
ஜோதி ரஞ்சன் ஜெனா ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து அங்கு விரைந்த சென்னை மாநில போலீசார் அம்மாநில போலீசார் உதவியுடன் ராகுல் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் என்வனையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகண்டோ இணையதளம் மூலம் இவர் தனது விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார்.
இதற்காக பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண்ணை அந்த இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த எண்ணில் தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடம் தங்களிடம் இருக்கும் பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார்.
இதையடுத்து சென்னை கிண்டி,தி.நகர்,நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்க கூடிய சர்வீஸ் அபார்மெண்ட்கள் மற்றும் பிரபலமான ஹோட்டல்களை ஆன்லைன் மூலம் புக் செய்து விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் முதல் தொடங்கி 30 லட்சம் வரை விபச்சார தொழிலை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இந்த தொழிலில் கல்லுாரி மாணவிகள்,சினிமா பிரபலங்கள்,குடும்ப தலைவிகள் என பலரையும் மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விமானங்களில் வர வைத்து விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார்.
இந்த தொழில் மூலம் ஆண்டுக்கு 3 முதல் 5 கோடி வரை சம்பாதித்து வந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜோதி ரஞ்சன் ஜெனா தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் விபச்சார அழகிகள் போனில் இரண்டு ரிங் கொடுத்துவிட்டு கட் செய்துவிடுவார்களாம். ஒரு மணி நேரத்திற்குள் இந்த ஹைடெக் புரோக்கர் போன் செய்யவில்லை என்றால் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ஓடிவிடுவார்களாம்.
பல வாட்ஸ அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் தனது விபச்சார தொழிலை விரிவுபடுத்தியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அவர்களிடம் இருந்து 8 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் இந்த தொழிலில் வேற யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.