மக்களே உஷார்!! ஓரினச்சேர்க்கையாளர்களிடம் அதிகளவில் பரவும் குரங்கு அம்மை - வெளியான அதிர்ச்சி தகவல்!

Monkeypox
By Swetha Subash May 19, 2022 01:37 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோயால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. இந்த நோய் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்களிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கனடாவின் கியூபெக் பிராவினஅஸ்-ல் சுகாதார ஊழியர்கள் குரங்கு அம்மை பாதிப்பு பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களே உஷார்!! ஓரினச்சேர்க்கையாளர்களிடம் அதிகளவில் பரவும் குரங்கு அம்மை - வெளியான அதிர்ச்சி தகவல்! | High Number Of Homeosexuals Affected By Monkey Pox

கனடாவில் இதுவரை 20க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு அபாயகரமான வைரஸ் பாதிப்பு என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணித்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் ஸ்பெயின்,போர்ச்சுகல்,ஆகிய நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அறிகுறிகள் முதலில் சாதாரணமாக காய்ச்சல்,தலை வலியாக தொடங்கி பின் அம்மை போன்ற வெடிப்புகள் தோன்றும் என அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

மக்களே உஷார்!! ஓரினச்சேர்க்கையாளர்களிடம் அதிகளவில் பரவும் குரங்கு அம்மை - வெளியான அதிர்ச்சி தகவல்! | High Number Of Homeosexuals Affected By Monkey Pox

இந்த நோய் பாதிக்கபட்டவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பரவும் குரங்கு அம்மை நோயால் அமெரிக்கா,ஆப்ரிக்கா,உள்ளிட்ட உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் 9 பேருக்கு தொற்று பதிவான நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

உறவு கொண்ட ஓரினச்சேரிக்கையாளர்கள் அசாதாரணமான தடிப்புகள் அல்லது புண்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என யுகேஎச்எஸ்ஏ தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.