மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய நார்ச்சத்து உணவுகள்

heath fiberfoodsforrainseason foodnews foodforhealth
By Petchi Avudaiappan 1 வருடம் முன்

 இந்தியாவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நாம் கால சூழ்நிலைக்கேற்ப நமது உணவுப் பழக்கத்தையும் மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம் மனித உடலால் நார்சத்து உறிஞ்சப்படும் போது, அது தேவையற்ற உணவை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.இது பெருங்குடல் பகுதி மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை என்பதால் இதனை தடுக்க கீழக்கண்ட நார்ச்சத்து உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த வாழைப்பழம், புரதத்தின் வளமான பருப்பு வகைகள், நார்ச்சத்து மற்றும் புரதசத்து இரண்டும் அதிகம் நிறைந்த ஆளி விதைகள், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் , வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த ப்ரோக்லி, பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்கள் ஆகியவை கண்டிப்பாக மழைக்காலத்தில் நம் உணவுகளில் சேர்க்கப்பட வேண்டிய மூலப்பொருட்கள் ஆகும்.