அதிக மின்கட்டண புகார்: ஆய்வு செய்ய உத்தரவு
ஜூலை மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்துள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
200 யூனிட் இலவச மின்சாரம் இருந்தும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது, இதுதொடர்பில் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் மின்வாரிய மூத்த அதிகாரிகள் மூலம் மின்இணைப்புகளை களஆய்வு செய்து ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஆய்வில் மீட்டர் கணக்கெடுப்பு, கணக்கீடு அல்லது கட்டணி நிர்ணயத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.