பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு; உயர் நீதிமன்றம் தடை - என்ன காரணம்?

Karnataka Menstruation
By Sumathi Dec 10, 2025 07:11 AM GMT
Report

மாதவிடாய் விடுப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மாதவிடாய் விடுப்பு

கர்நாடகாவில் உள்ள தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த நவம்பர் 20ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

menstrual leave

அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்புக்கு ஊதியமும் வழங்கப்படும். வருடத்திற்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை.

ஆனால் அந்தந்த மாத விடுப்புகளை அந்த மாதங்களிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். சேர்த்துவைத்து எடுக்கக்கூடாது. இதற்கு எந்த மருத்துவச் சான்றிதழும் சமர்பிக்க தேவையில்லை எனவும் உத்தரவிடப்பட்டது.

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் - காரணத்தை பாருங்க..

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் - காரணத்தை பாருங்க..

இடைக்கால தடை 

இந்நிலையில், பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்துள்ளது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த அவிராட்டா ஏஎஃப்எல் இணைப்பு

karnataka high court

அமைப்புகள் லிமிடெட் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி மனுக்கள் மீது நீதிபதி ஜோதி இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025 மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

அரசின் ஆணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிபதி, மாதவிடாய் விடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.