விஜய் மீதான தேர்தல் வழக்கு தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamil nadu Madras High Court C Joseph Vijay
By Vinoja Nov 27, 2026 07:12 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதி வாக்காளர் தினேஷ் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

விஜய் மீதான தேர்தல் வழக்கு தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | High Court Rejects Vijays Plea In Election Case

விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கிய ரூ.30 கோடி மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை மறைத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனை மறுத்த விஜய் தரப்பு, வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதா என்பதை தேர்தல் வழக்கு விசாரணையில்தான் தீர்மானிக்க முடியும் எனக் கூறி, விஜயின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேலும், பிரதான வழக்கில் விஜய் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.