முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

Pakistan Imran Khan
By Irumporai May 12, 2023 10:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமின் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான்கான் கைது

அல்-காதர் அறக்கட்டளை நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் கைது

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இன்ரான் கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இம்ரான்கான் கைதை தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. இன்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று கூறிய, இம்ரான் கானை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

  ஜாமீன் உத்தரவு

அதன்படி, சிறப்பு படை இம்ரான்கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது, சிறையில் இருந்து உடனடியாக இம்ரான் கானை விடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.