ஜெய்பீம் பட விவகாரம் : நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் பதிலளிக்க நீதிபதி உத்தரவு!
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெய்பீம்
விவகாரம் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் குறவர் சமூகத்தை சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி,
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி உத்தரவு
இந்த மனுவானது நீதிபதி ஆர். ஹேமலதா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா மீதும், இயக்குநர் த.செ.ஞானவேல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் இருவரையும் எதிர் மனுதாரர்களாக இணைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இருவரும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து சென்னை காவல் துறை, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

சிறுவர்களைக் கொன்று வீசிய இலங்கை இராணுவம்: சத்துருக்கொண்டான் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுகள் IBC Tamil
