ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் - உயர்நீதிமன்றம் மீண்டும் அனுமதி

Tamil Nadu Police Madras High Court
By Thahir Sep 30, 2022 10:37 AM GMT
Report

அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அனுமதி மறுப்பு 

அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கும்படி நிபந்தனைகளுடன் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ம் தேதி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து RSS மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் RSS பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் - உயர்நீதிமன்றம் மீண்டும் அனுமதி | High Court Gives Permission To Rss Rally

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முறையிடப்பட்ட நிலையில் வழக்கை நீதிபதி இளந்திரையன் முன்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

பேரணிக்கு அனுமதி 

அப்போது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.யாருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்ப மாட்டோம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை அனுமதி அளிக்க மறுக்கிறது என்று தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டு அனுமதி வழங்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து தமிழக அரசின் வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார்.பின்னர் அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் - உயர்நீதிமன்றம் மீண்டும் அனுமதி | High Court Gives Permission To Rss Rally

மேலும் அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கூறி 31ம் தேதி வழக்கை தள்ளிவைத்தார்.

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்ஃ