அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Tamil nadu K. Ponmudy Madras High Court
By Karthick Dec 19, 2023 05:50 AM GMT
Report

 சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 1996-2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக அதாவது சுமார் 1.36 கோடி ரூபாய் அளவுவிற்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

high-court-finds-ponmudy-guilty-in-assert-case

அந்த வழக்கின் விசாரணையில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவரின் குடும்பத்தினரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக வழக்கின் விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு நன்றி எனக் கூறி, அமைச்சருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சரிதான் என்று சுட்டிக்காட்டினார்.

high-court-finds-ponmudy-guilty-in-assert-case

இதில், மனுதாரருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும்போது, அதை தெரிவித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை ரத்து

இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை அளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் அவருக்கு கீழமை நீதிமன்றம் அளித்திருந்த விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

high-court-finds-ponmudy-guilty-in-assert-case

மேலும், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்படவுள்ள தீர்ப்பை வரும் 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார். தீர்ப்பின் போது அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நேரில் ஆஜராக உத்தரவு