தணிக்கை சிக்கல்.., ஜனநாயகன் தொடர்பான வழக்கு வாபஸ்
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், தணிக்கை பிரச்சனை காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்து வந்தது.
இந்நிலையில், நீதிமன்றம் மூலம் சென்றால் தாமதம் அதிகமாகும் என்பதால், வழக்கை திரும்பப் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி, தணிக்கை வாரியம் மூலமாகவே பிரச்சனையை முடிக்க திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தணிக்கை சான்றிதழ் கோரிய மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனால் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.