தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்றம்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

By Irumporai Dec 02, 2022 11:28 AM GMT
Report

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு

தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பாட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தாமிரபரணி எனும் சொல் வடமொழி சொல் எனவும், பொருநை நதி என்ற பெயர் தான் சங்ககால இலக்கியத்தில் உள்ளது.

தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்றம்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | High Court Change The Name Tamiraparani River

வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்

ஆதலால் பொருநை நதி என அதன் பெயர் மாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து 12 வாரங்களில் உரிய முடிவு எடுத்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கை தள்ளிவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.