மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை..
சென்னையில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையின் நரம்பியல் மருத்துவா் சைமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு மரணம் அடைந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய அந்தப் பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்து சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவர் சைமனின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. மேலும், வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், சைமனின் உடலை தொண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனுவை நிராகரித்துவிட்டனா்.
ஆகவே, சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனவும் தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதி மன்றம் ,கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல எனவ விளக்கமளித்து, சைமன் உடலை மறு அடக்கம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.