5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

Tamil nadu Law and Order Madras High Court
By Vinoja Jul 10, 2026 01:05 PM GMT
Report

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை | High Court Bans By Election To 5 Constituencies

வழக்கு விசாரணை

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்குகள் முடிவடைவதற்கு முன் இடைத்தேர்தல் நடத்தினால் ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசனச் சிக்கல் உருவாகும் என்றும், தேவையற்ற அரசு செலவும் ஏற்படும் என்றும் குறிப்பிட்டது.

இதையடுத்து, தேர்தல் வழக்குகள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் வரை, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.