வாய்தா கேட்டால் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Irumporai Jan 22, 2023 06:35 AM GMT
Report

நீதிமன்றங்களில் வழக்கை முடிக்காமல் தொடர்ந்து வாய்தா கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாய்தா கேட்டா அபராதம்

மாநிலம் முழுவதும் பல்வேறு சிவில் மற்றும் குற்ற வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் வாதி, பிரதிவாதி இருவரும் ஆஜராக வேண்டிய நிலையில் ஒருவர் ஆஜராகாத பட்சத்தில் வாய்தா அளிக்கப்பட்டு மீண்டும் ஒருநாள் ஆஜராக தேதி அளிக்கப்படுகிறது.

வாய்தா கேட்டால் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | High Court Announce Penalty For Vaidhaa

ஆனால் பல வழக்குகளில் பலர் ஆஜராகாமல் தொடர்ந்து வாய்தா வாங்குவதால் வழக்கு முடிவடையாமல் செல்வதுடன், எதிர் தரப்பினரின் செலவுகளும் அதிகரிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதன்படி, ஒரு வழக்கில் இழுத்தடிக்க தேவையில்லாமல் வாய்தா கேட்போருக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்து, வழக்கை நடத்த தயாராக இருக்கும் எதிர் தரப்பினருக்கு அந்த தொகையை வழங்க வேண்டும். நியாயமான காரணத்திற்காக வாய்தா அளிக்கப்பட்டால் அதை நீதிபதிகள் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.