நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்கள் நீக்கம்; அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!

Naam tamilar kachchi Seeman Madras High Court
By Jiyath Jul 24, 2023 05:39 PM GMT
Report

உயர் நீதிமன்ற சுற்றறிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவுத் துறை அனைத்து நீதி மன்றங்களுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்கள் நீக்கம்; அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்! | High Court Allow Photos Of Dr Ambedkar Ntk Seeman

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிசியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் வலியுறுத்தல்

அந்த அறிக்கையில் "அண்ணல்‌ அம்பேத்கர்‌ அவர்களின்‌ புகைப்படத்தை நீதிமன்றங்களில்‌ வைக்கக் கூடாது என்ற சென்னை உயர்‌ நீதிமன்ற பதிவுத்துறையின்‌ அறிவிப்பு அதிர்ச்சியும்‌, வேதனையும்‌ அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை புரட்சியாளர்‌ அம்பேத்கரின்‌ புகைப்படத்தையே நீதிமன்றங்களில்‌ வைப்பதை தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்கள் நீக்கம்; அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்! | High Court Allow Photos Of Dr Ambedkar Ntk Seeman

இந்நாட்டின்‌ நீதிமன்றங்களில்‌ இடம்பெற அண்ணல்‌ அம்பேத்கரைவிடவும்‌ வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின்‌ புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும்‌ என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர்‌ நீதிமன்ற பதிவரின்‌ இவ்வறிவிப்புத்‌ தோன்றுகிறது. சட்ட புத்தகத்தின்‌ ஒவ்வொரு எழுத்திலும்‌, இந்திய நீதிமன்றங்கள்‌ வழங்கும்‌ தீர்ப்பின்‌ ஒவ்வொரு வார்த்தையிலும்‌ புரட்சியாளர்‌ அம்பேத்கர்‌ புகழ்‌ நிலைத்திருக்கும்‌.அவர்‌ வகுத்தளித்த அரசியலைப்பு சட்டத்தின்‌ ஆட்சி இந்த நாட்டில்‌ நடைபெறும்வரை, அண்ணல்‌ அம்பேத்கர்‌ இந்த மண்ணில்‌ வாழ்ந்துகொண்டுதான்‌ இருப்பார்‌.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்கள் நீக்கம்; அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்! | High Court Allow Photos Of Dr Ambedkar Ntk Seeman

எத்தனை முயற்சிகள்‌ மேற்கொண்டாலும்‌, எத்தனை சூழ்ச்சிகள்‌ செய்தாலும்‌, அண்ணல்‌ அம்பேத்கரின்‌ பெயரையோ, புகழையோ எவராலும்‌ மறைக்க முடியாது. ஆகவே, சட்ட மாமேதை அண்ணல்‌ அம்பேத்கர்‌ அவரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில்‌ வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்‌ நீதிமன்ற பதிவுத்துறையின்‌ அறிவிப்பினை உடனடியாகத்‌ திரும்பப்பெற வேண்டுமென நாம்‌ தமிழர்‌ கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்‌ என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்ட புத்தகத்தின்‌ ஒவ்வவாரு எழுத்திலும்‌, நீதிமன்றங்கள்‌ வழங்கும்‌ தீர்ப்பின்‌ ஒவ்வாரு வார்த்தையிலும்‌ புரட்சியாளர்‌ அம்பேத்கர்‌ புகழ்‌ நிலைத்திருக்கும்‌ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.