அனுமதி இல்லாமல் கால்நடைகளை வெட்ட கூடாது : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

By Irumporai Feb 10, 2023 07:23 AM GMT
Report

கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் . அந்த வழக்கில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி ஒருவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார் .

அதனால், குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது அதனை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இறைச்சி கடை

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதி இன்றி இறைச்சி கடைகளை நடத்த கூடாது எனவும், கோவில் திருவிழாக்களை தவிர்த்து, கிராம புறப்பகுதிகளில் அனுமதியின்றி இறைச்சி கடை நடத்தவோ, கால்நடைகளை வெட்டவோ அனுமதி இல்லை என கூறினர்.

அனுமதி இல்லாமல் கால்நடைகளை வெட்ட கூடாது : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு | High Couet Meat Shops License

நீதி மன்றம் அனுமதி

மேலும்  சம்பந்தப்பட்ட இறைச்சிக்கடை நபர் கோழி இறைச்சி கடை நடத்த மட்டுமே அனுமதி வைத்திருந்தார் எனவும், அதனால் அவர் மாட்டிறைச்சி நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

அடுத்ததாக, உரிமம் இல்லாமல் நடத்தப்படும் இறைச்சி கடைகள் பற்றி உரிய விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.