நிர்வாண பூஜை செய்தால் புதையலா? - கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

priestforcewoman
By Petchi Avudaiappan Nov 13, 2021 08:27 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கர்நாடகாவில் போலிச்சாமியாரால் நிர்வாண பூஜை செய்ய அழைத்துச்செல்லப்பட்ட பெண், நான்கு வயது சிறுமியை போலீசார் மீட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பூனஹள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் என்ற விவசாயி  2019 ஆம் ஆண்டு ஒரு திருமண நிகழ்விற்காக தமிழகம் வந்துள்ளார். அப்போது ஷாஹிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு கர்நாடக சென்ற ஷாஹிகுமார் விவசாயி ஸ்ரீனிவாஸை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். அந்த வீடு ஸ்ரீனிவாஸின் பரம்பரை வீடு எனக் கூறப்படுகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

அவரை தனியாக அழைத்த ஷாஹிகுமார் இந்த வீட்டில் புதையல் மறைந்து இருப்பதாகவும், அந்த பொக்கிஷத்தை வெளியில் எடுக்காமல் விட்டால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத கெட்ட நிகழ்வுகள் நடக்கத்தொடங்கும் எனக் கூறியுள்ளார். இதற்கு நான் உங்களுக்கு பரிகாரம் செய்துத்தருகிறேன் என நம்பிக்கை அளித்து முன்பணமாக ரூபாய் 20ஆயிரம் ரொக்கமாக பெற்றுச்சென்றுள்ளார்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமக ஷாஹிகுமாரால் கர்நாடகம் செல்ல முடியவில்லை. இந்நிலையில் பரிகார பூஜையை தள்ளிவைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். அப்போது வீட்டில் பூஜை செய்வதற்கான அறையை தேர்ந்தெடுத்துள்ளார். பூஜை செய்யும் போது ஒரு பெண் நிர்வாணமாக தன் முன் அமர்ந்தால் புதையல் வெளிப்படும். அந்தப்பெண் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீனிவாஸ் ஒரு பெண்ணை ரூ.5000 கொடுத்து கூலிக்கு அழைத்து வந்துள்ளார்.

விவசாயி ஸ்ரீனிவாஸ் மற்றும் போலிச்சாமியார் ஷாஹிகுமார் நடவடிக்கையில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார் கூலிக்கு அழைத்து வந்த பெண்ணையும் அவரது 4 வயது குழந்தையையும் மீட்டனர். போலிச்சாமியார் ஷாஹிகுமார் மற்றும் அவருடன் இருந்த 5 நபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் போலிச்சாமியாரின் உதவியாளர் மோகன், கொத்தனார் வேலை செய்யும் லட்சுமி நரசப்பா, லோகேஷ்ம் நாகராஜ் மற்றும் பார்த்த சாரதி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.