விளாத்திகுளம் பழமைவாய்ந்த கோவிலின் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமராக்கள் - பக்தர்கள் அதிர்ச்சி, போலிஸ் விசாரணை

found tamil nadu hidden cameras in temple
By Swetha Subash Jan 21, 2022 02:08 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள பெண்களின் குளியலறையில், ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கொரு முறை மாசிக்கொடை திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர்.

அதன்படி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கு, குளிப்பதற்கு என கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பௌர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

அப்போது கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.

அப்போது குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, இது என்னவென்று எடுத்து பார்த்தபோது அது கேமிரா என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

இது வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி விசாரிக்கலாம் என கூறியுள்ளனர் கோவில் நிர்வாகத்தினர்.

கோவிலின் குளியலறையில் இருந்த ரகசிய கேமிரா கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், கோவிலுக்கு சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில்

கூடுதலாக 2 ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.மேலும் கேமராவுடன் சார்ஜர் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

மேலும் இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.