‘எனக்கு என் கணவன் திரும்ப வேண்டும்’ - காஜல் அகர்வாலிடம் கெஞ்சும் பிரபல நடிகை
பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஹே சினாமிகா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வரும் மார்ச் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
தமிழில் நடிகர் கார்த்தியும், மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், தெலுங்கில் மகேஷ் பாபு ஆகியோர் வெளியிட்டனர். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானின் மனைவியாக அதிதி ராவ் நடித்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே எப்போது பார்த்தாலும் பிரச்சனைகள் வெடித்து வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதன்பின் துல்கரின் தோழியாக காஜல் அகர்வால் நுழைய கிளைமேக்ஸ் என்ன ஆகிறது என்பது தான் ஹே சினமிகா படத்தின் கதை என எளிதாக ரசிகர்கள் யூகிக்கும் அளவுக்கு ட்ரெய்லர் அழகாக வந்துள்ளது.
மேலும் தனது அலுவலக நண்பர்களுடன் துல்கர் சல்மானின் மனைவியான அதிதி ராவ் கணவனை விவாகரத்து செய்ய வேண்டும் என பேசும் காட்சிகளில் தொடங்கும் படத்தில் காஜல் அகர்வால் வந்த பிறகு 'I Want My Husband Back' என அதிதி காஜலிடம் கெஞ்சும் காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. நிச்சயம் இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.