இந்திய வீரர்கள் குறித்த உளறல்கள் .. பதவியை ராஜினாமா செய்த சேத்தன் ஷர்மா
தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல சர்ச்சைகுரிய கருத்துகளை சேத்தன் ஷ்ர்மா தெரிவித்திருந்தார். இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.
சேத்தன் ஷர்மா
சேத்தன் ஷர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார். இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ இந்திய கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது இந்த ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா குறிப்பிட்ட சில விஷயங்கள் பின்வருமாறு, விராட் கோலி கேப்டன்சியில் இருந்து நீக்கியதில் கங்குலிக்கு பங்கு இருப்பதாக கோலி நினைக்கிறார்.
ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 9 பேர் இருந்தனர். அப்போது கங்குலி.. கோலியை கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம்.., ஒரு முறை யோசித்து பாருங்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை கோலி காதில் வாங்காமல் போய் இருக்கலாம். மேலும், இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள்.
ராஜினாமா
இவர்கள் வெறும் 80 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள். அவர்கள் வெறுமனே ஊசி போட்டுவிட்டு விளையாட தொடங்கி உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் பெயின் கில்லர்கள் எடுப்பது இல்லை. அவர்கள் பெயின் கில்லர் எடுத்து இருந்தால் அது ஊக்க மருந்து போல ஆகிவிடும் என கூறி அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில்தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்