17 ஆண்டுகளுக்கு பின்.. கோலியை தனக்கு பிடித்த வீரர் என்ற பிரபலம் - சுவாரஸ்ய தகவல்!
விராட் கோலியின் ஆட்டத்தை முன்னாள் வீரர் ஹர்ஷல் கிப்ஸ் புகழ்ந்துள்ளார்.
விராட் கோலி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு விராட் கோலியின் 51வது ஒருநாள் சதம் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹர்ஷல் கிப்ஸ், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணி. விராட் கோலி ரன்கள் எடுப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஹர்ஷல் கிப்ஸ் புகழாரம்
அவர் ரன்கள் எடுக்கும்போது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது விருப்பமான வீரர். இந்த நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவரது பசி மற்றும் உடற்தகுதி அருமையாக உள்ளன. அவர் இன்னும் நான்கு ஆண்டுகள் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன்.
தற்போது இந்திய அணி மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இது போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்கு முன்பு, 2008 அண்டர்-19 உலகக் கோப்பையில், கோலி இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி உலகக் கோப்பையை வென்றார். அப்போது கிப்ஸ் தனது விருப்பமான வீரர் என்று கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.