கதாநாயகியானார் வீரப்பனின் இளைய மகள்
                    
                tamil
            
                    
                daughter
            
                    
                movie
            
                    
                veerappan
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.
விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.