இஞ்சி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்!! - 3 பேர் கைது!

heroin seize andra
By Anupriyamkumaresan Jul 13, 2021 07:00 AM GMT
Report

ஆந்திராவில் இஞ்சி மூட்டைகளுக்குள் வைத்து கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் அதிக அளவில் வனப்பகுதி அமைந்திருப்பதால் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டு பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இஞ்சி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்!! - 3 பேர் கைது! | Heroin Seized Kanja In Andra

இந்த நிலையில் அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை மடக்கி சோதனை செய்ததில் இஞ்சி மூட்டைகளுக்கு நடுவே சுமார் 3 ஆயிரம் கிலோ எடையிலான கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை பறிமுதல் செய்த போலீசார், டெம்போவில் இருந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.