2 டோஸ் தடுப்பூசி போட்டும் பிரபல நடிகைக்கு கொரோனா
தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஷெரின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷெரின் விசில், நண்பேண்டா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகை விட்டு விலகியிருந்த அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் தெரிவித்துள்ளார்.
அவர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்ட நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த 3-4 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படியும், தனக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் ஷெரின் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.